புதுவரவு

தலைப்பிரசவம்
கலைந்த தலைமுடி
மழிக்கப்படாத
ஆறு திங்கள் தாடி

வாரிசு எதிர்பார்த்து
வாசலில் தவிப்புடன்
கணவன்

அறைமுழுக்க
அலறல் சத்தம்
அவனது மனைவியுடன்
ஏராளமான கர்ப்பிணித் தாய்கள்

பதட்டமின்றி
தலைப்பிள்ளையை குளிப்பாட்டி
அடுத்த பணிக்கு தயாராய்..
சேவைப்பெண்கள்

எடை குறைவாய் பிறப்பு
கண் விழித்தவள்
குழந்தை காணாது

தன்னைச்சுற்றி நோட்டமிட்டு
தவிப்பில் தாய்
பேச சக்தியின்றி
விழிகளால் அருகில்  வினவ

கண்டுகொள்ளாமல்
அடுத்த பிரசவ வலியில்
அலறும் பெண்நோக்கி
அடுத்த செவிலித்தாய்...

மருத்துவ மனை

அபி
27/2/23

Comments

Popular posts from this blog

நீரின்றி.....

நிரந்திரமில்லாத வாழ்வில்

திரையில் சாதி