திரையில் சாதி

நகரங்களில் மறந்து போனதை
மீண்டும் நினைவூட்டி
நாள்தோறும் திரைப்படங்களில்
வளர்க்கப்படுகிறது சாதி....

சாதியைச் சொல்லியே
நாள்தோறும் புதிதாய் வளர்கிறார்கள்
தலைவர்கள்....

தலைவர்கள் ஏராளமாய்
புதுப்புது கொடிகளோடு
தொண்டர்களின்றி......

தொண்டர்களின் அறியாமையால்
அடிக்கடி போராட்டங்கள் ஆங்காங்கே
காரணங்கள் தெரியாமல்......

தெரியாமல் நடத்தப்படுகிறது
அவ்வப்பொழுது சாதிக் கொலைகள்
மனித மிருகங்களால்.....

மிருகங்களும் தெய்வமாய்
போற்றப்படுகிறது அடிக்கடி
ஆட்சியாளர்களால்......

ஆட்சியாளர்கள் மாறினாலும்
நாங்கள் மறக்கவில்லை
எங்கள் இதயங்களில் நிரந்திரமாய்
சாதி சாதி சாதீ..........

சாதிக்கப் பிறந்தவர்கள்
சதித்திட்டம் தீட்டுகிறார்கள்
அவ்வப்பொழுது.......

அவ்வப்பொழுது மாற்றம் வருமென்று
நாட்களைக் கடத்துகிறோம்
நாமும் வாழ்வோம் என்று......

என்று சாகும் என
எவருக்கும் தெரியாது
சாமானியனுக்கு.......

சாமானியன் நினைத்தால்
சரித்திரம் படைக்கலாம்
சாதியை ஒழித்து
நாளைய இந்தியாவில்.......

அபி....

Comments

Popular posts from this blog

நீரின்றி.....

நிரந்திரமில்லாத வாழ்வில்