நீரின்றி.....
எப்போது தீரும் என்று
எவருக்கும் தெரியாது
நிச்சயமாக ஒருநாள் வரும்...
அண்டை மாநிலங்களில்
வலுகட்டாயமாக நான்கு மனைவிகள்
நாள்தோறும் நடந்து சென்று
நான்கு குடங்கள் நீரெடுக்க...
வாரிசுகளுக்கு சொத்துகளை
மறவாமல் விட்டுச் செல்கிறோம்
ஆனாலும் சொல்ல மறந்து போனோம்
இப்பொழுது கிராமத்து வீடுகளிலும்
தினசரி நிதி ஒதுக்கப்படுகிறது
குடிநீருக்காக...
வேண்டுதலின்றி உடனே கிடைக்கிறது
எல்லா ஆலயங்களிலும் சுத்தமான குடிநீர்
அவனுக்குத தெரியுமா/ தெரியாதா?
நீரின்றி அமையாது உலகு என்று.....
ஏராளமான எதிர்பார்ப்புகள்
அதிகாலையில் வீதி குழாய்களில்
எல்லோரின் நிரந்தர கனவாய் போனது
குடிநீர் கனவு....
தினசரி செய்திகளில்
கட்டாயம் இடம்பெறுகிறது
காலிக்குடங்களுடன் போராட்டம்
ஆம் எனது இந்தியா முன்னேறுகிறது
வறண்ட பட்டியலில் முதலிடம் பிடிக்க.... நீரின்றி அமையாது உலகு என்று
.......
அபி..... புதுக்கோட்டை
Comments
Post a Comment