புத்தகம்
புதிய கற்காலம் முதல்
கனிணிக்காலம் வரை..
பல மாற்றங்களோடு
இந்த வினாடிகள் வரை..
பிறப்புண்டு
பிணியில்லை
இறப்பில்லை என்னாளும்.
மாதங்கள் தோறும்
காதல் செய்ய ஆளின்றி
தனிமையில்
மௌனமாய் காத்துக் கிடக்கிறது.
வெற்றிக்கு அச்சாரமாய்
வெற்றியாளர்கள்கொண்டாட
மறந்து போனார்கள்.
இன்பத்தில் மௌனம்
இன்னல்களில் உறுதி
மற்றவர்களுக்கு விளக்காய்
மாறாத் தன்மையோடு...
வாழ்வாதார மூலதனம்
வாழ்க்கை வழிகாட்டி
எவ்வித எதிர்பார்ப்பின்றி.
அனைவருக்கும் பொதுவாய்
அன்று தொட்டு இன்று வரை
ஆராவாரமின்றி...
புத்தகம்.
அபி
12/12/22
Comments
Post a Comment