சுகமான வலிகள்

திருமணமான ஏழாம் நாள்
மாப்பிள்ளையோடு முதன்முறையாய்
அம்மா வீடு வந்தாள்

வாசலில் வரவேற்று
அழைத்துச் சென்று அமரவைத்தான்
பள்ளி செல்லும் தம்பி..

உறவுகள் ஒன்று கூடி
மாமன் அத்தை நலம் விசாரித்து
குடிக்க மோர் தந்தாள் பாட்டி

அவள் வயது ஒத்த கன்னிப்பெண்கள்
தனியாய் அழைத்து கிண்டலடிக்க
வெட்கத்தில் தலை கவிழ்த்து சிரிக்க
கால் விரல்கள் தரையில் நடனமாட...

மறைமுகமாய்
சிரித்துக் கொண்டிருந்த
அம்மாவின் செவியில் கேட்டது
வாரவட்டிக்காரனின் வண்டிச் சத்தம்

திடுக்கிட்டவளாய் வாசல் ஓடி
மாப்பிள்ளை வருகையைச் சொல்லி
யாருக்கும்தெரியாமல் அடுத்த வாரம்
தவணை கேட்டாள்...

மகள் திருமணத்திற்கு சீர் செய்த
மோட்டார் சைக்கிளை பார்த்தவாறு
கண்களில் நீர் வழிய
கைகூப்பி நிற்கிறாள்
கணவனை இழந்த அவளின் அம்மா...

அபி...
20/11/22

Comments

Popular posts from this blog

நீரின்றி.....

நிரந்திரமில்லாத வாழ்வில்

திரையில் சாதி