மனிதநேயம் நிறைந்த பாட்டி
நகரப்பேருந்து
காலையில் பரபரப்போடு
நிறுத்தம் தாண்டி நிற்க
மெதுவாய் வந்து ஏறினாள் அவள்
சுற்று முற்றும் பார்த்த விழிகள்
ஏமாந்து போயின இருக்கையின்றி
நிறைய பதின்பருவ இளசுகள்
தலை கவிழ்த்து தன்னிலை மறந்து
கைபேசியோடு அமர்ந்திருக்க
கடைசி இருக்கையில்
அமர்ந்திருந்த மூதாட்டி
மெல்லமாய் எழுந்து வந்து
அவள் கைகளை இறுக பிடித்து
எத்தனை மாதங்கள் என ...
அவளுக்கு தன்னிருக்கை காட்ட
அதற்குள் அவள் முந்தியவளாய்
இறங்கும் இடம் வந்ததை கைகாட்டினாள்
வாய்பேசா நிறைமாத கர்ப்பிணி !
மறந்து போன
மனித நேயத்தை
வாய் விட்டு சொல்ல வழியின்றி...
தலைமை மருத்துவமனை நோக்கி
மெல்ல நடக்கத் தொடங்கினாள்
நிறைமாத கர்ப்பிணி.
அபி&அபி
12/3/22
Comments
Post a Comment