பாதுகாப்பு பெட்டகம்

சொந்தம் கொண்டாட
வக்கில்லை
அழையா விருந்தாளியாய்
வந்து தொலைத்தது
உன்மீது மோகம்

உன் மீது தீராத காதல்
அவ்வப்போது வந்து போகிறது
உன் நினைவுகள் சிலருக்கு
முன் அனுமதியின்றி

பொறுமைக்கு உதாரணம்
உன்னைவிட சிறந்தது
எதுவுமில்லை

அவசர உலகில்
மனிதர்களைத் தேடி
ஆண்டுகள் கணக்கில்
காத்துக்கிடக்கிறது

நாளைய தலைமுறைக்கு
பாதுகாப்பு பெட்டகம்
படைப்பாளிகளின்
நிரந்தர சொத்து .

#நூலகம்.

அபி&அபி✍
10/01/22

Comments

  1. Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும்

      Delete
  2. Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும்

      Delete

Post a Comment

Popular posts from this blog

நீரின்றி.....

நிரந்திரமில்லாத வாழ்வில்

திரையில் சாதி