என்னங்க சட்டம்

நாளை புகும் வீடு
அதிகாலையில் ஒத்திகை பார்க்கிறாள்
சமையல் செய்து
பள்ளி மாணவி

ஒரு பாலினம் மட்டும்
எழுதப்படாத வீட்டுப்பணி
காலம் காலமாய்

உள்ளாட்சி அமைப்பில்
அதிகாரத்தில் அமர்ந்தால்
ஆண்களின் தலையீடு
அதிரடியாய்

விடுதலை பெறாத பாலினம்
சுதந்திரம் வேண்டி
பதாகைகள் ஏந்தி சிலர்

கல்லூரிகளில் காதல்
கல்விக்குத் தடை
ஆங்காங்கே அரங்கேற்றம்
குழந்தைத் திருமணங்கள்

ஆட்சியாளர்களின் எச்சரிக்கை
கண்டுகொள்ளாத ஆண்கள்
அடங்கிப் போகும் பெண்கள்

# என்னங்க உங்க சட்டம் .

அபி&அபி
05/01/22

Comments

Popular posts from this blog

நீரின்றி.....

நிரந்திரமில்லாத வாழ்வில்

திரையில் சாதி