சுதந்திரம் காணாத விவசாயி
மானமுள்ள விவசாயி
தனக்குத் தானே
பேசிக் கொள்கிறான்
என் நிலம்
என் உழைப்பு
என் உற்பத்தி
என்னைக் கேட்காமலே
விலை நிர்ணயம் மட்டும்
அரசு
துரித உணவுகள் வருகை
பெருகிப்போன உணவகங்கள்
குறைந்து மனித ஆயுள்
பக்தி எனும் பெயரில்
விலைகுடுத்து வாங்கி
வீதியில் எரிகிறார்கள்
வியர்வைக்கு மதிப்பில்லை
வாழ்வும் உயரவில்லை
வறுமைக்கு விடையளிக்க
சுயமரியாதை காக்க
தற்காலிகமாய் அருமருந்து
தற்கொலை
அபி.. ✍
18/12/21
Comments
Post a Comment