முற்றுப்புள்ளி


மாலை நேரம்
மன அமைதி வேண்டி
ஆலயம் செல்கிறாள்
அம்மா

வழித்துணைக்கு மகன்
பதின்பருவம் அடையாத வயது
அடுக்கடுக்காய் சில  சந்தேகம்
நெடுநாளாய்

ஆலய வாசலில்
சாமிக்கு பூ வாங்க
சட்டென மகன் கேட்டான்
அம்மா உன் தலையில்  பூ  பார்த்ததில்லையே !

சற்றும் எதிர்பாராமல்
நிலை குழைந்தவளாய்
இரு கடைக்கண்கள்  ஒரத்தில்
நீர் வழிய

தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்
நான் ஏன் மலர்கள்
வைக்கக்கூடாது என்ற வினாவிற்கு
முற்றுப்புள்ளி வைக்க

மீண்டும் இரு முழம் மல்லி வாங்கி
பூக்காரப் பெண்ணிடம்
குத்தூசி வாங்கி
தொங்க விட்ட படி

மகனின் கேள்விக்கு
விடை கூறிய திருப்தியுடன்
சற்றே நிமிர் நடையோடு
ஆலயம் நுழைகிறாள்

விதவைத் தாய் பட்டம் துறந்து
புரட்சிப் பெண்ணாய்
புது அவதாரம் எடுத்தாள்
கணவனை இழந்த பெண்.

அபி &அபி...✍
புதுக்கோட்டை
12/12/21

Comments

  1. Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும் சகோ

      Delete

Post a Comment

Popular posts from this blog

நீரின்றி.....

நிரந்திரமில்லாத வாழ்வில்

திரையில் சாதி