தண்ணீர் தண்ணீர்

உயிர் வாழ வசதியுள்ளவனும்
வீதியில் தேடி அலைகிறான்
காலங்காலமாய்

தடை செய்யப்பட்டபகுதி
முற்றிலும் நீங்கவில்லை
ஊசலாடுகிறது மனிதமனம்

பரந்த தேசம்
கட்டுப்பாடுகளோடு விற்பனை
கடைவீதிகளில்

கருவுற்ற தாய்மார்கள்
கால் வலிக்க
இடுப்பில் சுமக்கிறாள்

கோடைக்காலம்
திடீர் வரவு
வரவேற்க ஆளில்லை

எதிர்காலத்தில் தலைப்புச்செய்தி
வீடுகள் தோறும்
காதிலொலிக்கும்

அரசியல் கட்சிகளின்
அதிரடி வாக்குறிதி
வீட்டிற்கு நான்கு குடம்
இலவசம்

தண்ணீர் தண்ணீர்

அபி...
30/3/21

Comments

Popular posts from this blog

நீரின்றி.....

நிரந்திரமில்லாத வாழ்வில்

திரையில் சாதி