பெண்ணே விழித்தெழு

மழலையாய் பிறந்தவளே
மகளாய் வளர்ந்தவளே
மாணவியாய் பல நூல் கற்றவளே
பள்ளிப் பருவம் கடந்தவளே

கனிவாய் கூறுகிறேன்
கன்னிப் பெண்ணே
கல்லூரிக் காலம் கனவுகள் நிறைந்தது
கல்வி கற்க தடையாயிருக்கு
சில கருங்காலிகளால்
கல்வியில் சிறந்த தமிழ்நாடு

புகுந்த வீட்டில்
வைகறையில் எழுந்திரு
புதுமைப் பெண்ணே
ஆணாதிக்கம் சூழ்ந்த சமூகம்
சுயமாய் நிற்கப் பழகிடு

மருத்துவ படிப்பில் நுழைவுத்தேர்வு
மகளிர்க்கில்லை இட ஒதுக்கீடு
திராவிடக் கொள்கைகள் ஏராளம்
நீதி மட்டும் இங்கில்லை உனக்கு

தினமும் உயரும் எரிபொருள் போல
ஆண்கள் அதிகாரம் ஏறுகிறது
நீ விழிக்காத வரை

இரவில் பூட்டிய நீதிமன்றம்
பகலில் மூடியிருக்கு இன்று வரை
ஆஷிபா வழக்கு

பெண்கள் இட ஒதுக்கீடு தீர்மானம்
ஆதரவாய் கைதட்ட ஆளில்லை
சட்டமன்றத்தில்
மறந்து போயின
அரசியல் கட்சிகள்

விளையாட்டில் வீராங்கனைகள்
வென்றால் முதலில் பதக்கம்
இலவச இணைப்பு
பெண்தன்மை பரிசோதனை

தடகளத்தில் காணாமல் போன சாந்தி
கண்டுகொள்ளாத சமூகம்
தற்காலிக பணி வழங்கிய அரசு

மாதம் ஒருமுறை
மாதவிடாய் துணி
காணாமல் போகுது
அரசு பள்ளிகளில்
பெண்ணே விழித்தெழு

குடும்ப கட்டுப்பாடு
அறுவை சிகிச்சை
விதிவிலக்கு ஆண்கள்

அருகில் அம்பேத்கர்
நேரில் நேரு
கனவில் காந்தி
பாட்டெழுத பாரதி
கவிதைக்கு கண்ணதாசன்
யாரும் இங்கில்லை உனக்காக
பெண்ணே விழித்தெழு

அபி..✍️
21/3/21

Comments

Popular posts from this blog

நீரின்றி.....

நிரந்திரமில்லாத வாழ்வில்

திரையில் சாதி