பச்சை நிறம் பெயர்ப்பலகை
அரசியல் தலைவர்
இறுதி ஊர்வலம்
கூட்டம் மோதுகிறது
அம்மாக்களின் எதிரி
சில ஆண்களின்
நிரந்தர நண்பன்
பணம் இருந்தால்
உன் இருப்பிடம் தேடி
எந்தன் உள்ளம்
மகளிர் தாலி பறிக்க
அச்சாரமாய் இருக்கிறது
எப்போதும்
பிறக்கும் போது அடிமையில்லை
பதின் பருவத்தில் கூடா நட்பு
இறக்கும் வரை தொடருது
நொடிக்கு நொடி
சாலை விபத்துகள்
மூலை முடுக்கெல்லாம் நடக்க
முதன்மைக் காரணமாய்
மதுபானம்..
அபி...✍️
15/3/21
Comments
Post a Comment