மனித உயிர்களின் தேடல்

இயற்கையே!
நாள்தோறும் கூடுகிறது
உன் மதிப்பு
எட்டாத உயரத்தில் இருந்தாலும்

திட்டிக் கொண்டே
பள்ளிக் கூட மாணவர்கள் முதல்
கல்லறை செல்லும் மூத்தோர்கள்
ஏராளமாய் ரசிகர் பட்டாளம்

கண்டு கொள்ளாத சர்வாதிகாரிகள்
அங்கங்கே எதிர்ப்புகள்
தினசரி தலைப்புச் செய்திகள்
ஏற்றம் குறித்து

சாலையில் பயணம்
தூரம் செல்ல செல்ல
அளவு குறைந்து போகுது
கவலையில்லை

தெரிந்தே எடை குறைக்கிறோம்
தேட மனமில்லை
நீ இருக்கும் இடம் தேடி
ஒவ்வொரு (நாளும்) வாகனம்

எரிபொருள் (பெட்ரோல்)

அபி...✍️
21/2/21

Comments

  1. சிறப்பான படைப்பு வாழ்த்துகள் சகல

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும் சகல

      Delete

Post a Comment

Popular posts from this blog

நீரின்றி.....

நிரந்திரமில்லாத வாழ்வில்

திரையில் சாதி