நம்பிக்கை

கணவனை இழந்தவள்
சமாதானம்  கொள்கிறாள்
அழுகையுடன்

தன் வீட்டுத் தோட்டம்
பூத்த மல்லிகைப் பூக்கள்
தலையில் வைக்க யோசனை
விதவை

மீதமுள்ள காலம்
நம்பிக்கையுடன் கடத்துகிறாள்
உழைப்பு

கூலித்தொழில்
முப்பது நாள் உழைப்பு
முகம் சுளிக்க வைக்கிறது
ஊதியம்

சந்தையில்
குவியல் குவியலாக
காத்துக் கிடக்கிறது
ஊனமுற்ற காய்கறிகள்
ஏழைகளுக்கு

கணவர் மரணம்
அழையா விருந்தாளி வறுமை
வற்றாமல் இருக்கிறது
நம்பிக்கை

அபி...✍️
15/2/21

Comments

Popular posts from this blog

நீரின்றி.....

நிரந்திரமில்லாத வாழ்வில்

திரையில் சாதி