ஆணின் பிரசவ வலி

நீ அருகில் இல்லா நாட்கள்
வெறுமையாய்த் தருகிறது
பல நேரங்களில்
பெற்றோருக்கு

வீதியில் விளையாடும் குழந்தைகள்
பக்கத்து வீட்டு அம்மாவின் அதட்டல்களில்
காணாமல் போனது
உந்தன் பெயர்

பகிரங்கமாய் கேட்கிறது
சுற்றுச்சுவர்களில்
உந்தன் பெயர்
என் காதுகளில்

உன் வயது தோழர்கள்
காக்கி சீருடையின்றி
விசாரணை செய்கிறார்கள்
வெளியில் செல்லும் போது

இங்கில்லை என்று சொன்னாலும்
சிறார்கள் தேடுகிறார்கள்
கதவு ஓரங்களில் காணவில்லை
சிரித்த முகம்

காதலில் பிரிவுகள்
சரியான புரிதலின்மை
தந்தையின் தற்காலிக பிரிவு
வருங்கால நன்மைக்கு

நெடுந்தொலைவில் நீ இருந்தாலும்
அப்பாவும் உணர்கிறேன்
அவ்வப்போது பிரசவ வலி

அபி....
18/1/21
2.00 அதிகாலை

Comments

Popular posts from this blog

நீரின்றி.....

நிரந்திரமில்லாத வாழ்வில்

திரையில் சாதி