அழையா விருந்தினர்
யாருக்கும் தெரியாமல்
தனிமையில் பேசுகிறது
என்னோடு
எழுதுகோலில் மை தீர்ந்து
காகிதத்தில்
மறுபிரவேசம் செய்கிறது
எழுத்துக்களாய்
அடிக்கடி விலை ஏறினாலும்
குணம் மாறாமல் இருக்கிறது
என்னோடு
வறுமையில் வாடினாலும்
மது அருந்தாமல்
போதையுடன் வாழ்கின்றேன்
என்றும் உன்னுடன்
உயிருள்ள ஜீவன்களின்
நாடித்துடிப்பாய் மாறிப்போனது
எழுத்து வடிவில்
பூட்டிய வீட்டில்
அனுமதியின்றி
சில எழுத்தாளர்கள்
விருந்தினர்களாய்....
புத்தகம்
அபி...✍️
Excellent
ReplyDeleteமிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும்
DeleteThis comment has been removed by the author.
Deleteசிறப்பு வாழ்த்துகள்
ReplyDelete