நம்பிக்கை தூண்கள்.
விழியிருந்தும் தடம் மாறியது
வாழ்க்கைச் சக்கரம்
வழிகாட்ட பெற்றோரிருந்தும் தாறுமாறாய்
தட்டுத் தடுமாறி தடவித் தடவி
பகலிலும் நடக்கிறோம்
கரையேறத் தான் ஆசை
கட்டுப்பட மறுக்கிறது
மனம்
பொங்கி வரும் கடல் அலை போல
ஏற்றம் இறக்கமாய்-அடிக்கடி
மாற்று பாதையில்
கதவில்லாத வானிற்கு வேண்டா
வண்ணங்களும் தாழ்ப்பாளும்
பதின் பருவத்தில் அலைபாயும் மனதிற்கு
அடிக்கடி தேவை சுய ஒழுக்கம்
ஏராளமான ஆலோசனைகள் இருந்தும்
இணையத்தில் இலவசமாய்
சென்று பார்க்க மறந்து போனார்கள்
நாளைய தலைவர்கள் என்று
நாம் நம்பும்--இன்றைய
இளம் தலைமுறையினர்
அபி...✍️
Your poem takes the right direction
ReplyDelete