இருளின் தோழி

வரவேற்க ஆளில்லா இயற்கை வானில்
இருளில் வந்து போகிறது
கூட்டம் கூட்டமாய்

இன்று வரை சரியான எண்ணிக்கை
கூற தவறி விட்டது
விஞ்ஞான ஆராய்ச்சி

வானம் எட்டும் தூரம் தான்
அடிக்கடிக் கூறுகிறோம்
தன்னம்பிக்கையால்

உன்னை தொடும் நாள் அருகில்
எல்லோருக்கும் மட்டுமல்ல
எனக்கும்தான்

இயற்கையாய் இருப்பதால் உன்னை
விரும்புகின்றனர் எல்லோரும்
பேராசையில்

நெருங்கி வந்தால்  எரித்து விடுவாய்
தெரிந்தே  விரும்புகிறேன்
உன்னை

ஊரே இருளில் இருக்க
ஒருநாள் வந்து செல்
யாருக்கும் தெரியாமல்
என் வீடு.

விண்மீன்கள்

அபி....✍️

Comments

Post a Comment

Popular posts from this blog

நீரின்றி.....

நிரந்திரமில்லாத வாழ்வில்

திரையில் சாதி