ஆறாவது விரல் கைபேசி

உன்னைக் காண கண்கள் தேடுகிறது
எனக்கு மட்டுமா எல்லோருக்குமா
அதிகாலையில்

உன் வரவிற்குப் பிறகு
கடிகாரத்தில் நின்று போனது
அலாரம்

கடைகளில் புத்தாடைகளை விட
சிறப்பு சலுகைகள்
விழாக்காலங்களில்

விலை குடுத்து வாங்கியதும்
குறைந்து போகிறது
மதிப்பு

தேவையில்லை என ஒதுக்கினாலும்
மற்றவர்கள் உள்ளத்தில்
உயர்வாய்

இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள்
ஏராளமான தொழிலாளர்கள்
நகரங்களில்

உன்னுடலில் உதிரி பாகங்கள் விற்பனையில்
முதலிடத்தில் வட மாநிலத்தவர்கள்
மொத்த வியாபாரத்தில்

ஒரு சாண் வயிறு நிரப்ப
சில்லறை விற்பனையில்
உள்ளூர்வாசிகள்

இளைஞர்களின் கனவு நாயகனாய்
என்றும் முதலிடத்தில்
நீ

கைபேசி...

அபி...✍️

Comments

Popular posts from this blog

நீரின்றி.....

நிரந்திரமில்லாத வாழ்வில்

திரையில் சாதி