மனித உயிர்

நிறைய  சொத்துக்கள்
ஊரெங்கும்  நிறைஞ்சிருக்க..

இரு விழிகள்  இருந்தும்
பார்க்க  இயலவில்லை....

கட்டப்பட்ட  இரு
கைகள்  இருக்க
அசைக்க  முடியவில்லை....

நாசி இருந்தும்
கழுத்தில்  இட்ட
மலர்  வாசம்  அறியவில்லை. ..

கால்கள்  இருந்தும்
கடந்து  போக  மனமிருந்தும்
நடந்து  போக இயலவில்லை. ...

படிப்பறிவு  இருந்தும்
ஏடுகளை  புரட்ட முடியவில்லை....

இப்படி  ஏராளமாய்  இருந்தும்
எனக்கு  மட்டும் தெரியவில்லை. .....

எல்லாருக்கும்  தெரிந்தது
இறந்தவனால் இவையனைத்தும்
முடியாதென்று...

✒️......அபி

Comments

  1. Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்

      Delete

Post a Comment

Popular posts from this blog

நீரின்றி.....

நிரந்திரமில்லாத வாழ்வில்

திரையில் சாதி