கடைசி பதவி
எல்லா சாதியிலும்
இருக்கிறார்கள்
ஏராளமானோர்
கல்வித் தகுதியின்றி
மணமான பெற்றோர்களின்
அழையா விருந்தாளி
அனைவரது வாழ்விலும்
சுழற்சி முறையில்
மரணத்தின் அறிகுறி
இளையோருக்கு ஏளனம்
இல்லத்தில் ஒதுங்க ஓரமாய்
ஊதியமில்லா காவலாளி
தளர்வான மேனி
சுருங்கிய தோல்கள்
அழுக்கான ஆடை
துணைக்கு கையில் தடி
வாய்க்கு வெற்றிலை பாக்கு
எச்சில் துப்ப கறைபடிந்த டப்பா
ஆதரவற்றோருக்கு
அடைக்கலமாய் முதியோர் இல்லம்
மரணத்தின் வரவை நோக்கி
தாத்தா!
அபி....01/02/20
Comments
Post a Comment