ஆசு+இரியர்=ஆசிரியர்
அகிலம் முழுவதிலும்
ஆண்டிற்கு ஒரு நாள்
கதாநாயகர்களாய்......
அரசுத் துறையில்
அகவைக்கு ஒய்வு
அறிவிற்கு ஏது ஒய்வு..?
தேர்தலில் வென்றவனுக்கு
உறுதியாய் உண்டு
ஓய்வூதியம்....
தேர்வில் வெற்றி பெற்று
ஈராயுள் பணி புரிந்தவனுக்கு
நிச்சியமில்லை ஓய்வூதியம்
மருத்துவருக்கு பணிப்பாதுகாப்பு
அவர்களின் ஆசானுக்கு
பணியில் ஏது பாதுகாப்பு..?
குற்றமற்றவர்கள்
குற்றவாளிகளாய்
கூனிக் குறுகி நிற்கிறார்கள்
தவறுகளை சுட்டிக் காட்டுவதால்
அறிவிழந்த மூடர்களிடம்
தண்டனைகள் பெறுகிறார்கள்
ஆசிரியர்கள்.....
அபி......20/1/2020
Comments
Post a Comment