அழையா விருந்தாளி
எவருக்கும் தெரியாது
எப்போது வரும்
எப்படி என
இறுதி நாளில்
எல்லோரும் பேசுவார்கள்
நிறை குறைகள்
இயற்பெயர் மறைந்து
பாலினம் மறந்து
பொதுப்பெயரில் அழைப்பார்கள்
அழையா விருந்தாளியாய்
அனைவரும் வருவார்கள்
எதிர்பார்ப்பின்றி
மேல்சாதிக்காரணுக்கு
ஒடுக்கப்பட்டவன் ஓடி ஓடி
சடங்குகள் பல செய்வான்
நினைத்துப் பார்க்க மனமில்லை
நம்பிக்கையோடு கடந்து செல்கிறோம் ஒவ்வொரு நாளும்
தார் சாலைகளில்
தாராளமாய் நடக்கிறது
வாகனங்கள் முத்தத்தால்
விருப்பமின்றி அரங்கேறுது
அவ்வப்பொழுது ஆங்காங்கே
வலுக்கட்டாயமாக நடக்கிறது
மரணம்.
அபி.....
Comments
Post a Comment