பணம் எனும் பேய்

அறிந்த நாள் முதல்
தினசரி ஏங்கினேன்
நிரந்திரமாய் நீ வேண்டுமென
உறுதியாய்......

நீயோ
எல்லோருக்கும் பிரியமானவளாய்
வங்கிகளிலும்
வியாபாரக் கடைகளிலும்
முதன்மையாய் இருக்கிறாய்......

கையில் கிடைக்கும் போது
தொட்டுத் தடவி பார்த்து
சட்டைப் பைகளிலும்

கிராமத்து முதியவளிடம்
இடுப்பில் தொங்கும்
சுருக்குப் பைகளில்
இதயம் படபடக்க....

இப்படி எல்லோரது மனதிலும்
விடாப்பிடியாக வாடகையின்றி
கனவு நாயகியாய்.....

யாருக்கும் துணிவில்லை
வெறுக்க உன்னை
அதனால் தான்
அவ்வப் போது திமிராய்

பணம்....

அபி....12/1/2020

Comments

Popular posts from this blog

நீரின்றி.....

நிரந்திரமில்லாத வாழ்வில்

திரையில் சாதி