நிரந்திரமில்லாத வாழ்வில்

நிறமில்லை
சுவையில்லை
மனமில்லை

கருவில் இருந்த போதும்
இறந்த பின்னும் தேவையில்லை
ஒருபோதும்....

இருப்பவனுக்கு
நேரம் கடந்தும் மறந்து போகிறது
பண மோகத்தால்....

அனைவரும் விரும்பவில்லை
யாரும் வெறுக்கவுமில்லை
அழையா விருந்தாளியாய்......

தினசரி வருகையால்
யாவரும் ஓடுகிறார்கள்
வெவ்வேறு வழிகளில்...

மது அருந்தியவனுக்கும்
கோமாவில் இருப்பவனுக்கும்
ஒருகாலும் தெரிவதில்லை

அவமானங்களும் தன்மானமும்
ஒரு போதும் உயிர் காக்காது என
இல்லாதவனுக்கு தெரிந்து போனது

மனித உயிர்கள் மட்டும்
நாள்தோறும் தேடி அலைகிறது
ஒரு சாண் வயிறு வளர்க்க

இல்லாதவர்கள்
திருமண மண்டப பின்புறத்தில்
எச்சில் இலையில் தேடுகிறார்கள்....

வீசப்பட்ட உணவுகளைத் தேடி
நாள்தோறும் கடக்கிறான்
பசி எனும் பிணி நீக்க.....

அபி......16/11/19

Comments

  1. Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் அய்யா

      Delete
  2. Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ

      Delete
  3. அற்புதமான கவிதை

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்

      Delete

Post a Comment

Popular posts from this blog

நீரின்றி.....

திரையில் சாதி