வறுமை

முதலீடு வேண்டாம் என சொல்லாதீர்
தினம் தினம் மாறிப் போகும்
வாழ்க்கை செல்லும் பாதைகள்

கல்வியறிவு மட்டுமல்ல
கணினியறிவும் தேவை
நாள்தோறும் களத்தில் தைரியமாய் நிற்க

யாருக்கும் தெரியாது என நினைத்தால்
கட்டாயம் காட்டிக் கொடுக்கிறது
கண்காணிப்பு ஒளிப்படக் கருவி....

முதலிரவில் உழைப்பு
அதிகாலையில் தலைப்புச் செய்தியாக
தொலைக்காட்சிகளில்.......

சாலைகளில் தீவிரமாய்
அல்லும் பகலும் கடும் சினத்தோடு
களத்தில் காவல்துறை

கைதானவர்களின் கன்னிப் பேச்சில்
வயதான பெற்றோருக்கு மருத்துவம்
வயதுக்கு வந்த தங்கைக்கு திருமணம்....

இப்படி பலப்பல காரணங்கள்
பல ஆண்டுகளாக எப்போதும் வயிற்றுப் பசி
கல்விக் கடனுக்கு வட்டி கூடியது--இறுதியில்

பட்டதாரிகள் பெருகிப்போய்
காத்திருப்போர் பட்டியல் அதிகமானது
அரசின் வேலை வாய்ப்பு மையத்தில்....

போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளாமல் பணம் கொண்டு பறிக்கிறார்கள்
எளியவனின் திறமையை ஏராளமானோர்...

தொழில் நுட்பம் பெருகியதால்
படித்தவர்களும் கூட்டு சேர்ந்தார்கள்
முதலீடின்றி திருட்டுத் தொழிலில்..‌.....

அபி.....28/10/19

Comments

  1. இன்றைய அவல நிலைப்பாடு இதுவே...
    - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் அய்யா

      Delete
  2. கொடுமை... என்று தீரும் இந்த அவலம்.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete

Post a Comment

Popular posts from this blog

நீரின்றி.....

நிரந்திரமில்லாத வாழ்வில்

திரையில் சாதி