வளையல் வியாபாரிகள்
கிராமத்து தெருக்களில்
இப்போது சரிவர காணவில்லை
விஞ்ஞான உலகில்.....
பண்டிகை காலங்களில் கூட்டம் கூட்டமாய்
வந்து போகிறார்கள் கன்னிப்பெண்கள் குளிரூட்டப்பட்ட நகரத்து கடைகளில்.....
ஏழைப் பெண்களின் கைகளில்
ஏராளமாய் சத்தம் கேட்கிறது
திருமண நாளில்....
கர்ப்பிணி தாய்களின்
தற்காலிக மகிழ்ச்சியாய்
இன்று வரை முதலிடத்தில்....
நிச்சியமில்லா வாழ்வில்
நாள்தோறும் போராட்டமாய் போனது
சிலரது வாழ்க்கை மட்டும்....
ஒரு முறை தான் பிறந்து
தினசரி செத்து செத்து பிழைக்கிறார்கள்
ஒரு சாண் வயிற்றுக்காக...
நாள்தோறும் புதுப்புது பயணங்கள்
திருவிழாக்கள் நடக்கும் இடம் தேடி
அவசரமாய் தரை வாடகைக்கு கடை போட...
இருக்கும் இல்லம் தேடி வருகிறது
விதவிதமான கைசெயின்கள்
இணையத்தின் உதவியோடு.....
வேறு தொழில் மாற மனமின்றி
ஊர் ஊராய் சுற்றுகிறார்கள்
கன்னிப் பெண்கள் வெறுங்கை பார்த்து
ஏக்கத்துடன்
தலைமுறை தலைமுறையாக
வளையல் வியாபாரிகள்.....
அபி.....26/10/19
பல தொழில்களும் இதே நிலை...
ReplyDeleteபின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் அய்யா
Deleteஎல்லாம் கார்ப்பரேட் செய்த மாயம் .மீண்டும் அந்தக் காலம் வராதா என்ற ஏக்கம் கொள்ளவும் வைக்கிறது.
Deleteஎல்லாம் கார்ப்பரேட் செய்த மாயம் .மீண்டும் அந்தக் காலம் வராதா என்ற ஏக்கம் கொள்ளவும் வைக்கிறது.
Deleteஉண்மை சகோ
Delete