குற்றமற்றவர்கள்
அச்சகத்தில் விடுதலையான நூல்கள்
சிறை வைக்கப்பட்டுள்ள நூலகம் எதிரே மரங்களை வெட்டும் மனிதனுக்கு
நிழல் தரும் வேப்பமரத்தில்
வாடகையின்றி வசித்து வந்த
வாயில்லாப் பறவைகள்....
கூடுதல் அன்பினால் கலவியில் முடிந்து
அச்சாரமாய் இரு முட்டைகள் ஈன்று
இரக்கமில்லா இயற்கை காற்றில்
இழந்தது ஒரு முட்டையை.....
கடும் முயற்சியால்
சில நாட்களில் புதுவரவாய்........
தாய் பறவையின் சிறகுக்கடியில்
எண்ணிக்கையில் மூன்றாம் ஆளாய்
இறக்கை முளைத்து பறக்கம் வேளையில்
பறக்க இயலாத பச்சிளங்குழந்தை
இறப்பை நோக்கி பூமியில் மண்டியிட
பதறிப் போய் பரிதவிப்பில்
நாளைய ஆசிரியர்களின் கண்களில்.....
மணமாகாத பயிற்சி மாணவிகள்
தாயுள்ளம் கொண்டு தாயோடு சேர்க்க
மனித மொழி தெரியாத
பறவை தம்பதியர் வாயடைத்து நிற்க
இன்றைய தாய்மார்கள் தைரியமாய்
நல்ல இல்லத்தரசியாய்
பண்பில் சிறந்த மாணவர்களை
செதுக்கும் சிற்பிகளாய் கல்விச் சேவையில்
தன்னம்பிக்கையோடு இன்றைய சமுதாயத்தில்......
அபி.....30/9/19
அருமையான கவிதை
ReplyDeleteமிக்க மகிழ்ச்சியும் நன்றியும்
Delete